/* */

மனசே..!மனசே..! தன்னம்பிக்கை தொடர்-9 'எண்ணம் போல் வாழ்க்கை..!'

self confident article- வாழ்க்கை என்பது வாசமுள்ளது. அவரவர்களின் எண்ணம்போல்தான் வாழ்க்கையும் அமையும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

HIGHLIGHTS

மனசே..!மனசே..! தன்னம்பிக்கை தொடர்-9 எண்ணம் போல் வாழ்க்கை..!
X

self confidence-தன்னம்பிக்கை (கோப்பு படம்)

self confdence


self confdence

வாழ்க்கையில் எல்லோராலும் வெற்றி பெறமுடிகிறதா? அவர்களால் நினைத்ததை அடைய முடிகிறதா? என பல கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதற்கு விடை என்ன?எந்தவொரு விஷயமும் வாழ்க்கையில் நடக்கிறது என்றால் அதற்கு மனசு தான் காரணம். மனமது செம்மையானால் வாழ்வது சிறக்கும் என நாம் பல முறை சொல்லியாகிவிட்டது. அதாவது மனதில் என்ன நினைக்கிறோமோ? அதுவே செயலாக உருவெடுக்கிறது. மனதில் உங்களை நீங்கள் உயர்ந்தவர்கள் என நினைத்துக்கொண்டால் நிச்சயம் உயர்வீர்கள்...உயர்த்தப்படுவீர்கள்.அதற்கு மாறாக நம்மால் எதுவும் செய்ய முடியாது? என முடங்கி கிடந்தால் நாம் அப்படியேதான் இருப்போம். நாட்களும், ஆண்டுகளும் நம்மை கடந்து போய் இருக்கும். ஆக எந்த ஒரு செயலுக்கும் நாம் மனசு வைக்கணும்.

எண்ணங்கள் என்பது என்ன? உங்கள் மனதில் நீங்கள் தேக்கி வைத்திருக்கும் அபிலாஷைகள்தான் எண்ணங்களாக உருவெடுக்கின்றன. அவை நிகழ்காலம், எதிர்காலம் குறித்ததாக இருக்கலாம். ஆனால் ஒரு சில மாணவர்களை பார்த்தீர்களானால் கரெக்டாக ஸ்கெட்ச் போடுவார்கள். படிக்கும்போதே நாம் இப்படித்தான் ஆகணும் என தீர்க்கமாக தீர்மானம் போட்டுக்கொள்வார்கள் மனதில். அதேபோல் அவர்களுடைய வாழ்க்கையானது அமையும். ஒரு சிலருக்கு குருட்டு அதிர்ஷ்டம் என்று சொல்வார்களே... காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக வாழ்க்கையில் உயர்ந்தவர்களும் உண்டு.

துாய்மையான எண்ணங்களை மனதில் வைத்திருப்பவர்கள் அவர்களும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்த நினைப்பார்கள். கெட்ட எண்ணம் கொண்டவர்கள் அவர்களும் முன்னேறாமல் மற்றவர்களையும் முன்னேற்ற விடாமல் செய்துவிடுவார்கள் இதுதாங்க வித்தியாசம். ஒரு சிலருக்கு எப்போதுமே அடுத்தவர்களின் வாழ்க்கையை கவனி்ப்பது மட்டுமே வேலையாக இருக்கும்.இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் உயர்வு என்று எப்போதுமே இருக்காது. காரணம் நேரம் முழுவதும் மற்றவர்களை கவனித்தால் சொந்த வாழ்க்கை என்ன ஆகும்?

சுவாமி விவேகானந்தர் சொன்னதுபோல் எண்ணங்களை உயர்வாக வைத்துக்கொள்...வாழ்க்கையின் உயரத்துக்கு செல்வாய்... எண்ணங்கள்தான் வாழ்க்கை... மனதில் என்ன நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்... நீ உன்னை பலவீனமானவன் என நினைத்தால் நீ பலவீனனாகிறாய்... பலமுள்ளவன் என நினைத்தால் பலசாலியாகிறாய்... உன் எண்ணங்களை உன் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.

self காண்ப்பிடேன்ஸ்'மாணவர்களே... உங்கள் வாழ்க்கையில் எப்போதும் உயர்ந்தஎண்ணங்களையே எண்ணுங்க.. அப்போதுதான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். வள்ளுவர் சொன்னதுபோல் ''உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'' என்பதைப் போல் மனதில் உங்களை உயர்ந்தவர்களாக உருவகப்படுத்திக்கொள்ளுங்க... தானாகவே உயர்ந்தவர்களாகிவிடுவீர்கள்...அதற்கான உழைப்பும் முயற்சியும் இருக்கும் பட்சத்தில்...

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அனுபவத்தில் கண்ட உண்மை. படித்தவர்களை விட படிக்காதவர்கள் அதிக தன்னம்பிக்கை உடையவர்களாக உள்ளனர். காரணம் அவர்களுடைய உழைப்பு, எண்ணங்கள், விடாமுயற்சி, நேர மேலாண்மை, சின்சியாரிட்டி ,தன்னம்பிக்கை என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் படித்தவர்களில் நாம் கவுரவம் பார்த்துக்கொண்டு ஒயிட் காலர் ஜாப்புக்காக தேடிக் கொண்டிருக்கிறோம். காலம் முழுக்க உழைத்தும் நம் கனவுகள் வேலை பார்க்கும்போது நனவாவதில்லை. ஆனால் அதே நேரத்தில் படித்து சொந்த தொழில் செய்பவர்கள், படிக்காதவர்கள் இவர்கள் அனைவரும் எட்டமுடியாத உயரத்திற்கு செல்கிறார்கள். காரணம் அவர்களின் கலக்கமடையாத எண்ணங்களே.அவர்களுடையமேலான எண்ணங்களினால்தான் வாழ்வின் உச்சத்துக்கே செல்கின்றனர். இவர்கள் எல்லோருமே சிறுவயது முதல் மனதில் நாம் இப்படியாகவேண்டும் என தீர்க்கமான எண்ணத்தினை விதைத்தவர்களாக இருப்பார்கள்.

எனவே மாணவ, மாணவிகளே, படித்து முடித்த இளைஞர்களே அனைவருமே உங்கள் மனதில் ஆழமான நல்ல துாய்மையான எண்ணங்களை விதையுங்கள்... அந்த விதை நாளடைவில் வளர்ந்து விருட்சமாக வளரும்.. உங்களையும் வாழ்வில் உன்னத நிலையினை அடைய நிச்சயம் வழி வகுக்கும்... வாழ்வு உங்கள் வசப்படும்.

(இன்னும் வளரும்)

Updated On: 8 Sep 2022 7:58 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு