சமயபுரம் மாரியம்மன் கோயில் வேலை வாய்ப்பு : விண்ணப்பிக்க அழைப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயில் வேலை வாய்ப்பு : விண்ணப்பிக்க அழைப்பு
X

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பைல் படம்

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள,திருச்சி மாவட்டம் சமயபுரம் மரியம்மன் கோயிலில் உள்ள வேலை வாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது.

இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 29.11.2021. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

மருத்துவ அலுவலர் (Medical Officer) ,

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 75,000

செவிலியர் (Staff Nurse)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : DGNM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

மருத்துவ பணியாளர் (Hospital Worker)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் வரம்பு : 01.07.2021 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,000

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in , மற்றும் http://www.samayapuramtemple.org என்ற இணைய முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621112.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.11.2021



Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!