முதுநிலை பட்டதாரிகளுக்கு Research Assistant பணிகள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

முதுநிலை பட்டதாரிகளுக்கு Research Assistant பணிகள்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
X
TNPSC-ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

தமிழ்நாடு Evalution and Applied Research துறையில் காலியாக உள்ள பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:


1. பணியின் பெயர்: Research Assistant

காலியிடங்கள்: 6

சம்பளவிகிதம்: ரூ.36,900 - 1,16,600

வயது: 1.7.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி: PG Degre

Economics/ Econometrics/Statistics/Business Administration/Mathematics/Social Work/Sociology/ Anthropology/Agricultura Economics போன்ற பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் முதல் வகுப்பு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு 22.1.2022அன்று நடைபெறும்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை

TNPSC-ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் ரூ.150. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 19.11.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்: https://tnpsc.gov.in

இந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!