விளையாட்டு வீரர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வேயில் பணியிடங்கள்

10/ITI படித்தவர்கள் Technical பணிக்கும், +2/பட்டதாரிகள் Non-Technical பணிக்கும் தேர்வு செய்யப்படுவர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விளையாட்டு வீரர்களுக்கு மேற்கு மத்திய ரயில்வேயில் பணியிடங்கள்
X

விளையாட்டு வீரர்களுக்கான West Central Railway-ல் பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Clerk cum-Typist (Sports Quota 2021-22)

காலியிடங்கள்: 21

விளையாட்டு பிரிவு வாரியாக காலியிட பகிர்வு, விளையாட்டு தகுதி விபரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 1.1.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு/ ITI/+2/பட்டப்படிப்பு போன்ற ஏதாவதொரு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 10/ITI படித்தவர்கள் Technical பணிக்கும், +2/பட்டதாரிகள் Non-Technical பணிக்கும் தேர்வு செய்யப்படுவர்.

விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள விளையாட்டுகள் ஏதாவதொன்றில் சர்வதேச போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவதொரு போட்டியில் பங்கு பெற்று குறைந்தபட்சம் 3 வது இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 1.4.2019 தேதிக்கு பிறகு பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கிடப்படும். மேலும் தற்போதும் சம்மந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 செலுத்த வேண்டும். SC/ST/பெண்கள்/ சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.250 மட்டும் செலுத்த வேண்டும். இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.wcr.indianrailways.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 20.1.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு , அதிகாரப் பூர்வ அறிவிப்பை காண

NOTIFICATION

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

Updated On: 6 Jan 2022 3:35 AM GMT

Related News