மத்திய ஆயுதப்படை போலீஸ் படை பிரிவில் 'ஹெட் கான்ஸ்டபிள்' பதவிகள்

மத்திய ஆயுதப்படை போலீஸ் படை பிரிவில் ஹெட் கான்ஸ்டபிள் பதவிகள்
X
மத்திய ஆயுதப்படை போலீஸ் படை பிரிவில் 'ஹெட் கான்ஸ்டபிள்' பதவிக்கு 115காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய ஆயுதப்படை போலீஸ் படை பிரிவில் ஒன்றான சஹஸ்ட்ர சீமா பால் ( எஸ்.எஸ்.பி.,) படையில் 'ஹெட் கான்ஸ்டபிள்' பதவிக்கு 115காலியிடங்கள் உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.

வயதுவரம்பு : 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு. 1.6 கி.மீ. துாரத்தை 6 நிமிடம் 30 வினாடியில் கடக்க வேண்டும். பெண்கள் 800 மீட்டர் துாரத்தை 4 நிமிடத்தில் கடக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.100.பெண்கள், எஸ். சி., / எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 22.8.2021

ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும், விண்ணப்பிக்கும் விபரங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, கீழேகொடுக்கப்பட்டுள்ள அதிகார பூர்வ இணைய தளத்தின் அறிவிப்பு லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அதிகார பூர்வ இணைய தள அறிவிப்பு: http://ssbrectt.gov.in

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!