RIMC ராணுவ கல்லூரி பள்ளியில் சேர்வதற்கான அறிவிப்பு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது RIMC தேர்வுகள் குறித்து தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள்/ பதிவாளர்கள் அனைவரும் அது குறித்த தகவல்களை எங்கள் இன்ஸ்டாநியூஸ் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை அடுத்த கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆயினும் தொற்றின் பரவல் குறையாததினால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் பலனாக தொற்று குறைந்து வருவதினால் இதனை வரும் ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் சமீபத்தில் இந்த ஊரடங்கினை தளர்வுகளுடன் வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் நடத்த முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட தேர்வுகள் பலவும் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிப்புகள் வெளியாகி வருகினறன.
அந்த வகையில் TNPSC தேர்வாணையம் RIMC ராணுவ கல்லூரி பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்வு ஆனது வரும் 05.06.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது பொது முடக்கம் அமலில் உள்ளதால் அந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
மேலும் இத்தேர்விற்கான விண்ணப்பிக்கும் அவகாசம் ஆனது முன்னர் 21.05.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் வரும் 10.06.2021 அன்று வரை விண்ணப்பிக்க நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
https://www.tnpsc.gov.in/Document/PressEnglish/21_2021_PRESS RELEASE.pdf
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu