மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மின்னணு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மின்னணு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு
X

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய மின்னணு நிறுவனத்தில் (ECIL) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் ஒப்பந்த அடிப்படையில் Technical Officer பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு இன்ஸ்டாநியூஸ் சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.நிறுவனம் ECIL

பணியின் பெயர் Technical Officer

பணியிடங்கள் 04

கடைசி தேதி 17.06.2021 & 19.06.2021

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

ECIL கார்ப்பரேஷனில் Technical Officer பணிகளுக்கு என 04 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் 31.05.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Electronics & Communication / Computer Science ஆகிய பாடங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணியில் ஒரு வருடமாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 17.06.2021 மற்றும் 19.06.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

திறமையானவர்கள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் விண்ணப்பம் மற்றும் அசல் கல்வி ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவ மாதிரியினை அதிகாரப்பூர்வ தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

http://www.ecil.co.in/jobs/Advt_No_22_2021.pdf

http://www.ecil.co.in/jobs/Advt_No_23_2021.pdf

Next Story
குழந்தைகளின் இதயத்தை தாக்கும் கவாசாகி நோய் – காரணங்கள் மற்றும் தீர்வுகள்!