NCC பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பணிகள்

NCC பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பணிகள்
X
இளநிலைப் பட்டம் பெற்று, NCC ல் 2 வருட பணி அனுபவத்துடன் C சான்று பெற்றிருக்க வேண்டும்.

இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பணிகளுக்கான காலியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய உள்ளதால் ஆர்வமும், திறமையும் உள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது பற்றிய விபரங்கள் :

பணியின் பெயர் : லெப்டினன்ட் ( NCC Special Entry )

ஆண்கள் : 50

( இதில் 5 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது )

பெண்கள் : 5 ( இதில் ஒரு இடம் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது )

சம்பள விகிதம் : ரூ. 56,100 – 1,77,500

வயது வரம்பு : 1.7.2021 தேதிப்படி 19 முதல் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

இளநிலைப் பட்டம் பெற்று, NCC ல் 2 வருட பணி அனுபவம் பெற்று, C சான்று பெற்றிருக்க வேண்டும்.

போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கல்வித்தகுதி : இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

1.10.2021 தேதிக்குள் பட்டப் படிப்பை முடித்து பட்டம் பெரும் வாய்ப்புள்ள NCC மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உடற் தகுதிகள்

ஆண்கள் : 152 செ.மீ. உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் : 148 செ.மீ. உயரம், 42 கிலோ எடையை பெற்றிருக்க வேண்டும்.

உடற் திறன் தேர்வு : 2. 4 கி.மீ தூரத்தை 15 நிமிடத்திற்கு ஓடிக் கடக்க வேண்டும் .

Sit Ups : 25

Push Ups : 13

Chin Ups : 6

3-4 மீ தூரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் SSB நேர்முகத் தேர்வுவின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

SSB நேர்முகத் தேர்வு நடைபெறும் இடங்கள் : அலகாபாத், போபால்,பெங்களூர், கபூர்தலா.

தேர்வுக்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்தாரர்களுக்கு AC 3 –Tier ரயில்/ பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு:

www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள். விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட்அவுட் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-7-2021.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!