பொதுத்துறை வங்கியான Central Bank of India-வில் Specialist Officers பணிகள்

பொதுத்துறை வங்கியான Central Bank of India-வில் Specialist Officers பணிகள்
X
பொதுத்துறை வங்கியான Central Bank of India-வில் Specialist Officers பணிகள்: 17.12.2021 தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

பொதுத்துறை வங்கியான Central Bank of India-வில் காலியாக உள்ள Specialist Officers பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரங்கள் :

பணியின் பெயர்: Specialist Officerமொத்த காலியிடங்கள்: 115

பணி வாரியாக காலியிட விபரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது


சம்பள விகிதம்:

1. SCALE-I Officer: Rs.36,000-63,840

2. SCALE-II Officer: Rs.48,170-69,810

3. SCALE-III Officer: Rs.63,840-78,230

4. SCALE-IV Officer: Rs.76,010-89,890

5. SCALE-V Officer: Rs.89,890-1,00,320


1. Economist: Economics/Banking/Commerce/Economic Policy/Public Policy போன்ற ஏதாவதொரு துறையில் Ph.D. படிப்பை முடித்து 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. Income Tax Officer: CA படிப்பை முடித்து வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 10 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. IT Officer: (Scale V/Scale II)

CSC/IT/ECE போன்ற பாடப் பிரிவுகளில் ஏதாவதொன்றில் B.E./B.Tech. பட்டம் பெற் றிருக்க வேண்டும் அல்லது M.C.A. படித்திருக்க வேண் டும். SCALE-V பணிக்கு 10 வருட பணி அனுபவமும், SCALE-II பணிக்கு குறைந்தது 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: SCALE-II பணிக்கு 20 முதல் 35 வயதிற் குள் இருக்க வேண்டும். SCALE-V பணிக்கு 35 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. Data Scientist/Data Engineer:

Statistics/Econometrics/ Mathematics/Finance/ Economics/Computer Science பாடப்பிரிவுகள் ஏதாவதொன் றில் முதுநிலை பட்டம் அல் லது CSE/IT பாடப்பிரிவில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும். Data Scientist பணிக்கு 8 வருட பணி அனு பவமும், Data Engineer பணிக்கு குறைந்தது 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 26 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5. Credit Officer/Financial Analyst:

CA/MBA (Finance). பட்டம் பெற்று வங்கிகள்/ நிதி நிறுவனங்களில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: Credit Officer பணிக்கு 26 முதல் 34 வயதிற் குள்ளும், Financial Analyst பணிக்கு 20 முதல் 35 வயதிற் குள்ளும் இருக்க வேண்டும்.

6. IT Security Analyst/IT SOC. Analyst:

CSC/IT/ECE பாடத்தில் BE பட்டம் அல்லது MCA/M.Sc. (IT)/M.Sc. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண் டும். 6 வருட பணி அனுபவ மும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 26 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண் டும்.

7. Risk Manager (Scale-II/ III):

MBA (Finance) பட்டம் அல்லது ஏதாவதொரு பட்டப் படிப்புடன் Banking & Finance பாடத்தில் PG டிப்ளமோ படித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண் டும்.

8. Technical Officer (Credit):

Civil/Mechanical/Productioin/ Metallurgy/Textile/Chemical பாடங்களில் ஏதாவதொன் றில் BE பட்டம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 26 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

9. Law Officer/Manager:

LLB பட்டம் பெற்று பார் கவுன்சில் படிப்பை பதிவு செய் திருக்க வேண்டும். 3 வருடம் வழக்கறிஞர் பணி அனுப வமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

10. Security Manager (Scale I/Scale-II):

ஏதாவதொரு பட்டப்படிப்புடன் முப்படை களில் ஏதாவதொன்றில் குறைந்தது 5 வருடங்கள் அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 26 முதல் 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப் படுவர். எழுத்துத்தேர்வில் முக்கிய பாடங்கள், Computer Knowledge, Banking, General Awareness, Present Economic Scenario போன்ற பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு 22.1.2022 அன்று நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடங்கள் :

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற இடங்களில் தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கான Call letter-ஐ 11.1.2022 தேதிக்கு முன் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.850. (SC/ST பிரிவின் ருக்கு ரூ. 175). கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை www.centralbankofindia.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 17.12.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விபரங்களை அறிய அதிகார பூர்வமான அறிவிப்பை

இந்த இணைபை கிளிக் செய்து படியுங்கள் : https://www.centralbankofindia.co.in

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil