இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அசிஸ்டெண்ட் கண்ட்ரோல் ஆபீசர் பணிகள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் அசிஸ்டெண்ட் கண்ட்ரோல் ஆபீசர் பணிகள்
X
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Assistant Quality Control Officers பணியிடத்திற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Assistant Quality Control Officers பணியிடத்திற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விபரங்களவான :

1.பணியின் பெயர்: Assistant Quality Control Officers (Grade AO)

காலியிடங்கள்: 71

(UR 28, SC-10, ST-7, OBC-19, EWS-7 )

சம்பள விகிதம்: ரூ.40,000 - 1,40,000/

வயது: 30.09.2021 தேதியின் படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவின ருக்கு 3 வருடமும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடமும் வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வித்தகுதி: வேதியியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அத்துடன் குறைந்தது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடை பெறும் நாள்: 7.11.2021.

விண்ணப்பக் கட்டணம்

ரூ.300/- இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

SC/ST/PWD/ ExSM பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை:

www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 22.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபாலில் 6.11.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Advertiser,

Post Box No.3096.

Head Post Office,

Lodhi Road, New Delhi – 110.

மேலும், முழு விபரங்களுக்கு அதிகாரபூர்வ இணைய தளத்த்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : iocl.com

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!