/* */

விளையாட்டு வீரர்களுக்கு இந்திய வருமான வரித் துறையில் பணிகள்

இந்திய வருமான வரித் துறையில் Tax Assistant, Multi Tasking Staff பணிகளுக்கு தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

விளையாட்டு வீரர்களுக்கு இந்திய வருமான வரித் துறையில் பணிகள்
X

இந்திய வருமான வரித் துறையில் கொச்சின் அலுவலகத்தில் காலியாக உள்ள Tax Assistant, MTS பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Tax Assistant

காலியிடங்கள்: 5

வயதுவரம்பு: 18-லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.25,500/- 81,100/-

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இள நிலை பட்டப்படிப்பு தேர்ச்சி யுடன் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் பெயர்: Multi Tasking Staff

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 18-லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.18,000/- 56,900/-

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

உச்ச வயதுவரம்பில் பொது மற்றும் OBC பிரிவினர்க ளுக்கு 5 வருடமும், SC/ST பிரிவினர்களுக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை உண்டு.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் Athletics, Badminton, Table Tennis, Swimming மற்றும் Rowing இதில் ஏதாவது ஒரு விளையாட்டுப் பிரிவில் தேசிய, மாநில மற்றும் பல்கலைக்கழக அளவில் விளையாடி இருக்க வேண்டும். மேலும் 2017, 2018, 2019 மற் றும் 2020-ம் ஆண்டுகளில் பங்கேற்று விளையாடி இருக்க வேண்டும். இதில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை டவுண் லோடு செய்து அதைப் பூர்த்திச் செய்து அனைத்துச் சான்றிதழ் களின் நகல்களையும் இணைத்து 31.12.2021 தேதிக்குள் கீழ்க் கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் தபால் கவரின் மீது "Application for recruitment in sports quota in Income Tax Department 2021-22" என்று குறிப்பிட வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy Commissioner of Income-Tax (HQ) (Admn.)

O/o. the Principal Chief Commissioner of Income-Tax,

Fax Kerala, C.R. Building,

I.S.Press Road, Kochi- 682018

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.incometaxindia.gov.in இந்த இணையதள முகவரியை பாருங்கள்.

Updated On: 24 Dec 2021 3:05 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...