முன்னாள் ராணுவத்தினருக்கு இந்தியன் வங்கியில் பணிகள்
முன்னாள் ராணுவத் தினரு க்கான பணியிடங்களை இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்த விபரங்களவான :
காலியிடம்: உத்தரபிரதேசம் 64, மேற்கு வங்கம் 25, தமிழகம் 19, புதுச்சேரி 6, ஒடிசா 34, மஹாராஷ்டிரா 33, மத்திய பிரதேசம் 16, ராஜஸ்தான் 8, பீஹார் 12, சத்தீஸ்கர் 6, சண்டிகர் 5, அசாம் 4, டில்லி 4, உத்த ரகண்ட் 4, ஜார்க்கண்ட் 4, குஜராத் 3 உட்பட 200 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
இந்தியன் வங்கி செக்யூரிட்டி கார்டு பணிகளுக்கு விண்ணப்பிக்க ராணுவம், கடற்படை அல்லது விமானப்படையில் முன்னாள் ராணுவ வீரராக இருக்க வேண்டும். லோக்கல் மொழியில் பேச, படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மாநில கல்வி வாரியம் அல்லது அதற்கு இணையான கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இருப்பினும், மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்ற 15 வருட அனுபவமுள்ள முன்னாள் ராணுவத்தினர் பட்டதாரிகளாகக் கருதப்படுபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். செக்யூரிட்டி காவலருக்கு, வேட்பாளர் உடல் தகுதியுடன் இருப்பது அவசியம்.தகுதி : இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு பணிக்கான உட ல்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது: ராணுவத்தில் பணியாற்றிய பணிக்காலம், கூடுதலாக மூன்று ஆண்டுகள் அல்லது 45 வயது க்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, மாநில மொழி அறிவு, உடல்தகுதி தேர்வு.
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 9.3.2022
மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை கவனமாக படிக்கவும். இது குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu