10, 12ம் வகுப்பு படித்தோருக்கு ரூ.11,916 சம்பளத்தில் வேலை

10, 12ம் வகுப்பு படித்தோருக்கு ரூ.11,916 சம்பளத்தில் வேலை
X
தென்காசி மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் 10, 12ம் வகுப்பு படித்தோருக்கு ரூ.11,916 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் குழந்தை நலக் குழுமத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.09.2022க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பதவி: கணினி இயக்குபவர்

மொத்த பணியிடங்கள்: 02

கல்வித்தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணிணியில் சான்று

சம்பளம்: மாதம் ரூ.11,916/-

வயது வரம்பு: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தென்காசி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் செப்டம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.09.2022

மேலும் விபரங்களுக்கு: Click Here

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!