ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கு வேலை வாய்ப்பு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கு வேலை வாய்ப்பு
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குறைந்த பட்ச கல்வித் தகுதிக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளியில் காலியாக உள்ள ஆகம ஆசிரியர், எழுத்தர், சமையலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.01.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகம ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் 5 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும். வைணவ ஆகமத்தில் தற்போது வேத ஆகம பாடசாலையில் 4 ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 36,000 – 1,14,400

சமையலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 12,000

சமையல் உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 10,000

எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 10,000

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 7,000

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://srirangam.org/wp-content/uploads/2021/11/APP aplication.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.01.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://srirangam.org/wp-content/uploads/2021/11/APP conditions.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்