அண்ணா பல்கலையில் வேலை; கடைசிநாள் 23ம் தேதி, 9 ம் வகுப்பு பாஸா, உடனே விண்ணப்பிங்க
அண்ணா பல்கலைக்கழகம் ஒன்பதாம் வகுப்பு பாஸ் செய்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பன்னாட்டு விடுதியில் காவலர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தினசரி கூலி அடிப்படையில், 6 மாத காலத்திற்கு நிரப்படும். தகுதியுள்ளவர்கள் நவம்பர் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காவலர் (Watchman)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 9
கல்வித் தகுதி - 9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் - தினசரி ரூ.370
வயதுத் வரம்பு - இந்த பணியிடங்களுக்கு 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை - இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை - இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.annauniv.edu/pdf/watch.pdf என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று, அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
The Executive Warden, International Hostels, Anna University, Chennai – 600 025.
மேலும் தகவல்களுக்கு - 044 2235 – 9827 / 9826 Email. Id: annaihhostels@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள் - 23.11.2021
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/watch.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu