பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் Group C பணிகள்

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு  இந்திய ராணுவத்தில் Group C பணிகள்
X
Group C பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள Group 'C' பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Cook.

காலியிடங்கள்: 11 (UR-7,SC-2, ESM-1, EWS-1)

2. பணியின் பெயர்: Boot Maker

காலியிடங்கள்: 2 (ESM-1, PWD-1)

3. பணியின் பெயர்: Carpenter

காலியிடம்: 1 (UR)

பணி எண் 1, 2 மற்றும் 3-க் கான சம்பளவிகிதம்: ரூ.19,900

4. பணியின் பெயர்: Washerman

காலியிடங்கள்: 2 (OBC-1, ST-1)

5. பணியின் பெயர்: Barber

காலியிடங்கள்: 6 (UR-2, SC-1, EWS-1, ESM-1, PWD-1)

6. பணியின் பெயர்: Safaiwala

காலியிடங்கள்: 2 (UR-1, OBC-1)

பணி எண் 4, 5 மற்றும் 6-க்கான சம்பளவிகிதம்: ரூ.18,000

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் வயது 18 லிருந்து 25 க்குள் இருக்க வேண்டும்.

SC/ST பிரிவினருக்கு 5 வருடமும், OBC பிரிவினருக்கு 3 வருடமும், PWD பிரிவினருக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் செய்முறைத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும்முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் www.indianarmy.nic.in என்ற இணை யதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை கவனமாக படியுங்கள்.

அதில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்து சான்றிதழ்களை இணைத்து சுய முகவரியிட்ட கவருடன், ரூ.5-க்கான தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால்கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்..

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Rajputana Rifles,

Regimental Centre,

Delhi,

Cantt-10.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.8.2021.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.indianarmy.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Tags

Next Story
விரதத்துடன் தலைவலியும் வந்தால் என்ன செய்யலாம்? தீர்வுகள் இதோ!