பெரம்பலூர் மாவட்டத்தில் மாபெறும் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தோறும், தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் மாபெறும் வேலைவாய்ப்பு முகாம் 29.10.2021 அன்று முதல் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் "வேலைவாய்ப்பு முகாம்"; பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுகுறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது பணிக்காலியிடம் மற்றும் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால், இம்முகாமிற்கு பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்துகொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்த் துறை நிறுவனங்களும் வருகின்ற 29.10.2021 முதல் வெள்ளிக்கிழமை தோறும், காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும் 29.10.2021 அன்று ஆசிரியர், ஓட்டுநர் பணியிடங்களுக்கும் ரூ.10,000- ஊதியத்தில் வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம் என்று, மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu