உதகையில் டிச. 29ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: யாரெல்லாம் பங்கேற்கலாம்?

உதகையில் டிச. 29ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்: யாரெல்லாம் பங்கேற்கலாம்?
X
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் டிச. 29ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ந் தேதி, ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெறுகிறது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

இதில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. முடித்தவர்கள், தொழில் கல்வி பெற்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் பட்டம், டிரைவர்கள், தையல் கற்றவர்கள் என அனைத்து தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்வது அவசியம்.

மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0423-2444004 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

Heading

Content Area


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!