வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியில் சேர பெண்களுக்கு அழைப்பு
கோவையில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு, பெண்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில், மதுக்கரை மற்றும் தொண்டாமுத்துார் வட்டாரத்தில் காலியாக உள்ள, 2 வட்டார மேலாளர் மற்றும், 12 வட்டாரங்களில், 33 ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள், மாவட்ட அளவில் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு, பெண்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வட்டார மேலாளர் பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ரூ.12 ஆயிரம் வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும்.
2022, செப்., 1 அன்று, 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.எழுத்து மற்றும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். ஒப்பந்த அடிப்படையில், வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் நியமிக்கப்படும் வேலை இது. ஒரு நாள் விட்டு ஒரு நாள், தற்செயல் விடுப்பு வழங்கப்படும்.11 மாதங்கள் முடிந்த பின், பணியை மதிப்பீடு செய்து, ஒரு வாரம் கழித்து, வட்டார கூட்டமைப்பு மூலம் புதிய நியமன ஒப்பந்தம் வழங்கப்படும்.எக்காலத்திலும் பணியில் முன்னுரிமை கோர முடியாது.
பணியில் போதிய திருப்தி இல்லாத பட்சத்தில், இணை இயக்குனர் அல்லது திட்ட இயக்குனரால், எந்த நேரத்திலும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவர்.தகுதியுள்ளவர்கள், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கலெக்டர் அலுவலக வளாகம் பழைய கட்டடம் - இரண்டாவது தளம், கோவை - 18 என்ற முகவரிக்கு, 23க்குள் விண்ணப்பிக்க, கோவை கலெக்டர் சமீரன் அழைப்பு விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu