/* */

தமிழக அரசின் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அரசாணைகள்

தமிழக அரசின் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அரசாணைகள்

HIGHLIGHTS

தமிழக அரசின் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அரசாணைகள்
X

தலைமை செயலகம் (பைல் படம்)

தமிழக அரசு ஊழியர்கள் நினைவில் வைக்க வேண்டிய முக்கிய அரசாணைகள்

(1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும்,

பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278)

(2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)

(3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)

(4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)

(5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)

(6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)

(7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)

(8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)

(9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)

(10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை)

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசாணை எண் 39

பள்ளிக் கல்வி (இ2) துறை

அரசாணை எண் 39

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி (இ2) துறை

அரசு ஆணை ( நிலை) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

Updated On: 24 Sep 2021 3:16 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி