வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியத் தவறியவர்கள் ஆன்லைன் மூலம் எப்படி புதுப்பிப்பது?

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியத் தவறியவர்கள் ஆன்லைன் மூலம் எப்படி புதுப்பிப்பது?
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பதியத் தவறியவர்கள் புதுப்பிப்பதற்கான சிறப்பு சலுகையை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களின் தற்போது பதிவு செய்ய சிறப்பு சலுகை முடிவடைந்த நிலையில் 3 மாதங்கள் கால அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் 2014, 2015, மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும் 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையிலும் தற்போது 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வரும் மார்ச் 2ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்குள் பதிவுதாரர்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

இந்த சலுகை ஒரு முறை மட்டும் வழங்கப்படும். 3 மாதங்களுக்குப் பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 01.01.2014-க்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

மேலும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்களில் உள்ள தகவல் பலகையில் (Notice Board in all District Employment and Career Guidance Centres) பொது மக்களின் தகவலுக்காக காட்சிப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்குமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த கால அவகாசம் பயன்படுத்தி புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் புதுப்பிப்பது எப்படி?

பதிவுதாரர்கள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் சென்று 'Renewal Click here' என்பதை கிளிக் செய்து உள் நுழைய வேண்டும்.


பின்னர் உங்களுக்கான 'User ID' மற்றும் 'Password' டைப் செய்து கிளிக் செய்தால் உங்களுக்கான விபரங்களை கொடுத்து புதுப்பித்துக்கொள்ளலாம்.




இதனைத்தொடர்ந்து பதிவு செய்ததற்கான 'Identity Card' உங்களுக்கு கிடைத்துவிடும்.

Tags

Next Story