ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையத்தில் (RGCA) குரூப் B & C பணிகள்

ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையத்தில் (RGCA) குரூப் B & C பணிகள்
X
கல்வித்தகுதி, பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு/ நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகமான MPEDA இன் கீழ் செயல்படும் சொசைட்டியான ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையத்தில் (RGCA) குரூப் B & C பணியிடங்களை நிரப்ப உள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரங்கள் :

இடம்: தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள Rajiv Gandhi Centre for Aquaculture


பணியின் பெயர்: Junior Engineer (Civil)

காலியிடம்: 1 (UR) சம்பளவிகிதம்: ரூ.47,600 - 1,51,100

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: B.E. (Civil (Engineering) படிப்புடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


2. பணியின் பெயர்: Junior Engineer (Mechanical)

காலியிடம்: 1 (UR) சம்பளவிகிதம்: ரூ.47,600 - 1,51,100

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: B.E. (Mech anical Engineering) படிப்பு உடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


3. பணியின் பெயர்: System Analyst

காலியிடம்: 1 (UR)

சம்பளவிகிதம்: ரூ.35,400 - 1,12,400

வயது: 32வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Computer application-ல் முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது Computer Science/IT பாடப் பிரிவுகளில் M.Sc. அல்லது .Tech. முடித்திருக்க வேண்டும். மேலும் மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


4. பணியின் பெயர்: Senior Field Officer

காலியிடங்கள்: 13 (UR-8, OBC-3, SC-1, ST-1).

சம்பளவிகிதம்: ரூ.35,400 - 1,12,400

வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மீன்வள அறிவியல் பாடப்பிரிவில் M.F.Sc. அல்லது Marine Biology, Marine Sciences, Mariculture, Aqua culture, Fishery Science, Aquatic Biology, Fisheries, Industrial Fisheries போன்ற பாடப் பிரிவுகளில் ஏதாவதொன்றில் M.Sc. முடித்திருக்க வேண் டும். கணினியில் பணி அனுப வம் பெற்றிருப்பது விரும்பத் தக்கது. மேலும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


5. பணியின் பெயர்: Electrician

காலியிடங்கள்: 3 (UR-2, OBC-1)

சம்பளவிகிதம்: ரூ.29,200 - 92,300

வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது எலக்ட்ரீசி யன் டிரேடில் ITI முடித்து 'B' அல்லது 'C' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.500. இதனை Director, Rajiv Gandhi Centre for Aqua culture என்ற பெயரில் SBI வங்கியின் மயிலாடுதுறை கிளையில் (Code: 0000875) மாற்றத்தக்க வகையில் D.D. யாக எடுக்க வேண்டும். SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை;

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, பணி அனுப வத்தின் அடிப்படையில் தகுதி யானவர்கள் எழுத்துத்தேர்வு/ நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.rgca.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து rgca.recruit-ment2021@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்ப படிவத்தின் நகல் ஒன்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் அல்லது பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

The Director Rajiv GandhiCentre for Aquaculture (RGCA),

(MPEDA, Ministry of Commerce & Industry, Govt. of India),

No. 3/ 197, Pommpuhar Road, Karai medu Village,

Sattanatha puram Post, Sirkali Taluk, Pin - 609 109.

Mayiladuthurai District, Tamil Nadu.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 15.12.2021.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்து படியுங்கள்: http://www.rgca.co.in

இந்த இணைப்பில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்