10ம் வகுப்பு தகுதிக்கு இந்திய கடற்படையில் Group 'C' பணிகள்

10ம் வகுப்பு தகுதிக்கு இந்திய கடற்படையில் Group C பணிகள்
X
இந்திய கடற்படையில் Group 'C' பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய கடற்படையில் Group 'C' பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

1.பணியின் பெயர்: Civilian Motor Driver

காலியிடங்கள்: 10 (UR-4, SC-3, ST-1, OBC-1, EWS-1)

சம்பளவிகிதம்: ரூ.19,900 முதல் 63,200/ வரை

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Pest Control Worker

காலியிடங்கள்: 12 (UR-4, SC-1, ST-2, OBC-4, EWS-1)

சம்பளவிகிதம்: ரூ.18,000 முதல் 56,900/

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தியில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும்.

பணி எண் 1 மற்றும் 2-க் கான வயதுவரம்பு: 18-லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவின ருக்கு 5 வருடமும், OBC பிரி வினருக்கு 3 வருடமும் வயது வரம்பில் சலுகை உண்டு

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை A4 அளவு வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்து அல்லது கையால் எழுதி அதை பூர்த்தி செய்ய வேண்டும்.

அத்துடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை படிவத்தின் வலது மூலையில் ஒட்ட வேண்டும். பின்னர் விண்ணப்பப் படிவத்தை சுய சான்று (self attest) செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அனுப்பும் தபால் கவரின் மீது "Application for the post of and category குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Flag Officer, Commanding in Chief, Head quarters, Southern Naval Command, Kochi-682004.

விண்ணப்பிக்க வேண் டிய கடைசி நாள்: 26.8.2021.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.indiannavy.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முழு விபரங்களையும் கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்