இந்திய மக்களை பணியில் அமர்த்த போர்ச்சுகீஸ் குடியரசுடன் மத்தியஅரசு ஒப்பந்தம்
பிரதமர் நரேந்திரமோடி
போர்ச்சுகீஸ் குடியரசில் இந்திய குடிமக்களை பணியில் அமர்த்துவதற்கு இந்தியா மற்றும் போர்ச்சுக்கல் அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய பணியாளர்களை அனுப்பவும், ஏற்றுக்கொள்ளவும் இந்தியா மற்றும் போர்ச்சுகல் இடையே ஒத்துழைப்பு மற்றும் கூட்டணிக்கான நிறுவனம் சார்ந்த செயல்முறைக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுப்பது சிறப்பானதாகும். இத் திட்டத்தின் அமலாக்கத்தை கண்காணிப்பதற்காக இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஓர் கூட்டு குழு அமைக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் ஐக்கிய ஐரோப்பிய உறுப்பு நாட்டில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள், குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றினால் இந்தியாவிற்கு திரும்பி உள்ள ஏராளமான இந்திய தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான புதிய தலமாக போர்ச்சுகல் விளங்கும். திறன் வாய்ந்த இந்திய தொழிலாளர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். இந்த ஒப்பந்தத்தின் இறுதியில், இந்திய தொழிலாளர்களை பணியில் அமர்ந்துவதற்கான முறையான ஏற்பாட்டை போர்ச்சுக்கல்லும் இந்தியாவும் மேற்கொள்ளும்.
போர்ச்சுகல் நாட்டில் பணிபுரியும் மேம்பட்ட வேலை வாய்ப்புகளை இந்திய தொழிலாளர்கள் பெறுவார்கள். இந்த ஒப்பந்தத்தில் முன்மொழியப்பட்டுள்ள அரசுகளுக்கு இடையேயான செயல்முறை, இரு தரப்பின் அதிகபட்ச ஆதரவுடன் பணியாளர்களின் இடமாற்றம் சுமூகமாக மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu