எஸ்சி / எஸ்டி மாணவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

எஸ்சி / எஸ்டி மாணவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
X
ஆதி திராவிடர், பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் முகாம்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்துடன் இணைந்து இலவசமாக இளைஞர் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமை நடத்த இருக்கிறது. இப்பயிற்சியில் சேர்ந்து பயில்வதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட தகுதிகள் இருக்கவேண்டும்.

கல்வி தகுதி:

பிஏ/பிகாம்/பிசிஏ (2020-21-ல் தேர்ச்சி பெற்றிருத்தல்) & 2022-ல் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்கள்

பிரிவு: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர்கள்.

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 100 மணி நேரம்.

காலி இடங்கள்: 50

பயிற்சி முடித்தவுடன் அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தை 10.05.22 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 044-24615112/ 8248962842 என்ற தொலைபேசி அல்லது செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story