மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள்
தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (Medical Services Recruitment Board) காலியாக உள்ள 119 உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த உணவு பாதுகாப்பு அதிகாரி காலியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும்.
பதவி பெயர்: உணவு பாதுகாப்பு அதிகாரி
காலியிடங்களின் எண்ணிக்கை: 119 பணியிடங்கள்
சம்பளம்: மாதம் ரூ .35,900 - ரூ .1,13,500.
இடஒதுக்கீடு விபரம்:
கல்வித்தகுதி:
உணவு தொழில்நுட்பம் அல்லது பால் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் / பயோடெக்னாலஜி / எண்ணெய் தொழில்நுட்பம் / விவசாய அறிவியல் / கால்நடை அறிவியல் / உயிர் வேதியியல் / நுண்ணுயிரியல் / வேதியியலில் முதுகலை பட்டம் / பல்கலைக்கழக மானியக் குழு மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ இளங்கலை பட்டம்.
(அல்லது) மத்திய அரசு அறிவிக்கப்பட்ட வேறு ஏதேனும் நிகரான / அங்கீகரிக்கப்பட்ட தகுதி.
குறிப்பு: விண்ணப்பதாரர் (HSC) மேல்நிலை கல்வியில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/SCA/ST/DAP(PH) -யை சேர்ந்தவர்கள் Rs. 350/- , மற்றவர்கள் Rs. 700/- என விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு https://fso21.mrbonline.in/ என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்..விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் இம்மாதம் 28ம் தேதி.
மேலும் விபரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/pdf/2021/FSO_notification_131021.pdf என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu