வேலை வழிகாட்டி: 10th, +2 & ITI தகுதிக்கு இந்திய விமானப்படையில் Group-C பணிகள்

வேலை வழிகாட்டி: 10th, +2 &  ITI  தகுதிக்கு இந்திய விமானப்படையில் Group-C பணிகள்
X
இந்திய விமானப்படையில் Group-C பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்

இந்திய விமானப்படையில் Group-C பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

1. பணியின் பெயர்: Superintendent (Store)

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இள நிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Lower Division Clerk (LDC)

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தை கள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Hindi Typist

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Store Keeper

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் Store-ல் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Civilian Mechanical Transport Driver

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற் றும் கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் Motor Mechanism பிரிவில் அறிவும், 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6.பணியின் பெயர்: Cook

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Catering துறையில் ஒரு வருட டிப்ளமோ சான்றிதழ் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: Painter

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இப்பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: Carpenter

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Carpenter பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

9. பணியின் பெயர்: HouseKeeping Staff (HKS)

10. பணியின் பெயர்: Mess Staff

11. பணியின் பெயர்: Multi Tasking Staff

பணியின் பெயர், காலியிட விபரம் கீழே அட்டவணை யில் கொடுக்கப்பட்டுள்ளது.


பணி எண் 9, 10 மற்றும் 11-க் கான கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் 18-லிருந்து 25 வயதிற்குள் இருக்க வேண் டும். மேலும் SC/ST பிரிவின ருக்கு 5 வருடமும், OBC பிரி வினருக்கு 3 வருடமும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 வருடமும் வயதுவரம்பில் சலுகை உண்டு.

சம்பளம்: மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். அதன் விபரங்களை கீழே அட்டவணையில் காணலாம்.


தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத் துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வுக்கான கேள்விகள் பணிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி அடிப்படையில் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

அதிகார பூர்வமான இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் : http://www.davp.nic.in

தரவிறக்கம் செய்தவுடன், அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். தேவையான சான்றுகளின் நகல்களுடன் இணைத்து விண்ணப்பம் செய்யுங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.8.2021

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!