திருப்பூரில் மே 2வது வாரத்தில் ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி

திருப்பூரில் மே 2வது வாரத்தில் ஆடை உற்பத்தி சார்ந்த பயிற்சி
X

கோப்பு படம் 

திருப்பூரில், ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்ட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

திருப்பூரை அடுத்த கைகாாட்டிப்புதுாரில், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (ஏ.டி.டி.சி) செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆடை உற்பத்தி சார்ந்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கை வேலைப்பாடுகளுடன் கூடிய எம்ப்ராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் குறித்த பயிற்சி வரும் மே மாதம் 2வது வாரத்தில் துவங்க உள்ளதாக, ஏ.டி.டி.சி. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இப்பயிற்சிகளில் இணைவதற்கான சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. மேலும் விவரங்களுக்கு, 88700 08553, 94864 75124, 79042 24344 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என ஏ.டி.டி.சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!