நவோதய வித்யாலயா பள்ளிகளில் Non-Teaching பணிகள் : காலியிடங்கள் 1925

நவோதய வித்யாலயா பள்ளிகளில் Non-Teaching பணிகள் : காலியிடங்கள் 1925
X
www.novodaya.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 10.2.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள நவோதய வித்யாலயா சமிதி பள்ளிகளில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மொத்த காலியிடங்கள் 1925. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிட விபரங்கள் கீழே அட்டவணையில் பாருங்கள்


இதுகுறித்த விபரம் வருமாறு:

1.பணியின் பெயர்: Assistant Commissioner (Group 'A')

காலியிடங்கள்: 5 (UR-3, ST-1, OBC-1)

சம்பளவிகிதம்: ரூ.78,800/- 2,09,200/-

வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Humanities/Science/Commerce பாடப் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Assistant Commissioner (Admn) (Group 'A')

காலியிடங்கள்: 2 (UR)

சம்பளவிகிதம்: ரூ.67,700/- 2,08,700/-

வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியு டன் 8 வருட பணி அனுப வம் பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Female Staff Nurse (Group 'B')

காலியிடங்கள்: 82 (UR-35, EWS-7, OBC-22, SC-12, ST-6)

சம்பளவிகிதம்: ரூ.44,900/- 1,42,400/-

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் பாடத்தில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Assistant Section Officer (Group 'C')

காலியிடங்கள்: 10 (UR-6, EWS-1, OBC-1, SC-1, ST-1)

சம்பளவிகிதம்: ரூ.35,400/- 1,12,400/-

வயதுவரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க Gareisth. Computer Operation-ல் அறிவுத்திறனும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

5.பணியின் பெயர்: Audit Assistant (Group 'C')

காலியிடங்கள்: 11 (UR-3, EWS-1, OBC-1, SC-5, ST-1)

சம்பளவிகிதம்: ரூ.35,400/- 1,12,400/-

வயதுவரம்பு: 18-லிருந்து 30வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பி.காம். தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Junior Translation Officer (Group 'B')

(UR-3, OBC-1)

சம்பளவிகிதம்: ரூ.35,400/- 1,12,400/-

வயது: 32 வயதிற்குமிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஹிந்தியுடன் ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியை பாட மாகக் கொண்டு முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: Junior Engineer (Civil) (Group 'C')

காலியிடம்: 1 (UR)

சம்பளவிகிதம்: ரூ.29,200/- 92,300/-

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் Construction Building-ல் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: Stenographer (Group 'C')

காலியிடங்கள்: 22 (UR-10, EWS-3, OBC-6, SC-3)

சம்பளவிகிதம்: ரூ.25,500/- 81,100/-

வயதுவரம்பு: 18-லிருந்து 27 வயதிற்குள்ளிருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சியு டன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 80 வார்த் தைகளும், தட்டச்சில் 40 வார்த்தைகளும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

9. பணியின் பெயர்: Computer Operator (Group 'C')

காலியிடங்கள்: 4 (UR-2, EWS 1. OBC-1)

சம்பளளிகிதம்: ரூ.25, 500/- 81.100/-

வயதுவரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Word Processing & Data Entry-ல் 5 திறமையுடன், ஒரு வருட கம்ப் யூட்டர். டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10.பணியின் பெயர்: Catering Assistant (Group 'C')

காலியிடங்கள்: 87 (UR-37, EWS-6. OBC-23, SC-13, ST-6)

சம்பளவிகிதம்! ரூ.25,500/- 81.100/-

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Catering அல்லது Hotel Management பிரிவில் வருட டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர்: Junior Secretariat Assistant (Group 'C')

காலியிடங்கள்: 8 (UR-4, EWS-1, OBC-2, ST-1)

சம்பளவிகிதம்: ரூ.19,900/- 63,200/-

வயதுவரம்பு: 18-லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 25 வார்த்தைகள் ஹிந்தியிலும் தட்டச்சு செய்ய தெரிந்தி ருக்க வேண்டும்.

12. பணியின் பெயர்: Junior Secretariat Assistant

காலியிடங்கள்: 622 (UR 254, EWS-62, OBC-167, SC-93, ST-46)

சம்பளவிகிதம்; ரூ.19,900/- 63,200/-

வயதுவரம்பு: 18-லிருந்து 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியு டன் நிமிடத்திற்கு ஆங்கிலத் தில் 30 வார்த்தைகளும், ஹிந் தியில் 25 வார்த்தைகளும் தட் டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

13. பணியின் பெயர்: Electrician Cum Plumber

காலியிடங்கள்: 273 (UR 113, EWS-27, OBC-73, SC-40, ST-20)

சம்பளவிகிதம்: ரூ.19,900/- 63,200/-

வயதுவரம்பு: 18-லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician அல்லது Wireman/Plumbing பிரிவில் ITI தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

14. பணியின் பெயர்: Lab Attendant (Group 'C')

காலியிடங்கள்: 142 (UR-59,EWS-14. OBC-38, SC-21, ST-10)

சம்பளவிகிதம்: ரூ.18,000/- 56,900/-

வயதுவரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Laboratory Technique-ல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

15. பணியின் பெயர்: Mess Helper (Group 'C')

காலியிடங்கள்: 629 (UR 257, EWS-62, OBC-169, SC-94, ST-47)

சம்பளவிகிதம்: ரூ.18,000/- 56,900/-

வயதுவரம்பு: 18-லிருந்து 30வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

16. பணியின் பெயர்: Multi Tasking Staff (Group 'C')

காலியிடங்கள்: 23 (UR-14, EWS-2, OBC-5, SC-1, ST-1)

சம்பளவிகிதம்: ரூ.18,000/- 56,900/-

வயதுவரம்பு: 18-லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உச்ச வயதுவரம்பில் SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்க ளும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், PWD பிரிவின ருக்கு 10 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: பணி 1, 2 மற்றும் 7-க்கு CBT தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பணி எண் 3, 4. 5. 6. 10. 14 மற்றும் 16-க்கு CBT தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பணி எண் 8, 11, 12, 13 மற்றும் 15-க்கு Trade Test/Skill Test தட்டச்சு தேர்வு/ சுருக்கெழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். CBT தேர்வு 9.3.2022 முதல் -11.3.2022 வரையிலான தேதிகளில் நடைபெறும்.

எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம்: Reasoning Ability. General Awareness. Language Competency Test. Subject Specific Knowledge etc.

விண்ணப்பக் கட்டணம்

பணி எண் 1 மற்றும் 2-க்கு ரூ.1500,

பணி எண் 3-க்கு ரூ.1200,

பணி எண் 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13-க்கு ரூ.1000,

பணி எண் 14, 15 மற்றும் 16க்கு ரூ.750 விண்ணப்பக் கட்டணமாகும்.

இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

www.novodaya.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் 10.2.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நேர்முகத்தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிரிண்ட்அவுட் விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்று செய்து கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இந்த இணைப்பை பாருங்கள்: https://navodaya.gov.in

இந்த இணைப்பில் உள்ள அதிகார பூர்வ அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்