சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு: 236 பணியிடங்கள் உடனே விண்ணப்பிங்க

சென்னை மாநகராட்சியில் 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29ம் தேதியாகும்.

HIGHLIGHTS

சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு: 236 பணியிடங்கள் உடனே விண்ணப்பிங்க
X

சென்னை மாநகராட்சி அலுவலகம் ( பைல் படம்)

சென்னை மாநகராட்சியின், சென்னை மாநகர சுகாதாரத் திட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் என 236 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 29ம் தேதி விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாளாகும்.மருத்துவ அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை- 21

கல்வித் தகுதி - MBBS படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 60,000

செவிலியர்

காலியிடங்களின் எண்ணிக்கை- 25

கல்வித் தகுதி - B.sc. Nursing or Diploma in Nursing or Diploma in General Nursing and Midwife படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 14,000

ஆய்வக தொழில் நுட்ப வல்லுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை- 10

கல்வித் தகுதி - 12 ஆம் வகுப்பில் அறிவியல் படித்திருக்க வேண்டும். மற்றும் டிப்ளமோ ஆய்வக நுட்புனர் (DMLT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

மருந்தாளுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை- 6

கல்வித் தகுதி - 12 ஆம் வகுப்பு மற்றும் D.Pharm படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

துணை செவிலியர்கள் (ANMs / LHVs)

காலியிடங்களின் எண்ணிக்கை- 144

கல்வித் தகுதி-: 12 ஆம் வகுப்பு மற்றும் ANM courseபடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,000


X – ray டெக்னிசியன்

காலியிடங்களின் எண்ணிக்கை- 11

கல்வித் தகுதி - X ray technician course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

அறுவை அரங்க உதவியாளர் (OT Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை- 02

கல்வித் தகுதி : Diploma in Operation Theatre Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,400

Data Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை- 17

கல்வித் தகுதி - பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,350

தேர்வு செய்யப்படும் முறை - இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.விண்ணப்பிக்கும் முறை :-இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/NUHM/NUHM.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அல்லது கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Office of the Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 3

மின்னஞ்சல் முகவரி- gcc2021hremployment@gmail.com

விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.11.2021Updated On: 23 Nov 2021 3:04 AM GMT

Related News

Latest News

 1. அரசியல்
  மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்: பிரதமர்
 2. கோயம்புத்தூர்
  கோவையில் மார்ச் 9-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
 3. உசிலம்பட்டி
  பிரதமர் மோடிக்கு எதிராக உசிலம்பட்டி அருகே விவசாயிகள் போராட்டம்
 4. வீடியோ
  Modi செய்த செயல் அதிர்ச்சியடைந்த Annamalai !#annamalai #annamalaiips...
 5. ஈரோடு
  கோபி அருகே இளம் வயது திருமண எதிர்ப்பு, கோடை வெப்பம் விழிப்புணர்வு...
 6. திருவள்ளூர்
  சிறுவாபுரி முருகன் கோவிலில் வழிபாடு நடத்திய பெண்ணின் சேலையில் தீ
 7. Trending Today News
  Leap Year- லீப் வருடம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது ஏன் தெரியுமா?
 8. டாக்டர் சார்
  Symptoms Of Heart Attack மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள்...
 9. வீடியோ
  தொண்டர்கள் கரகோஷத்தில் ஆரவாரம் | | தட்டிகொடுத்து பாராட்டிய Modi |...
 10. குமாரபாளையம்
  குமாரபாளையம் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...