வேதியியலர் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வேதியியலர் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
X
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக இருந்ததை இப்போது மாற்றம் செய்துள்ளனர்.

வேதியியலர் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு தொழில் சார்நிலைப் பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு மார்ச் 19ம் தேதி அன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற் போது இந்த எழுத்துத்தேர்வு நிர்வாக காரணங்களால் சென்னை மையத்தில் மட்டும் மேற்குறிப்பிட்ட தேதியில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!