டிப்ளமோ தகுதிக்கு கடலோர காவல் படையில் Charge man -Group 'B' பணிகள்

டிப்ளமோ தகுதிக்கு கடலோர காவல் படையில் Charge man -Group B பணிகள்
X
டிப்ளமோ தகுதிக்கு கடலோர காவல் படையில் Charge man -Group ‘B’ பணிகள்

நொய்டாவிலுள்ள கடலோர காவல் படையில் டிப்ளமோ தகுதிக்கு Charge man -Group 'B' பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர்: Charge man

காலியிடங்கள்: 9 (SC-1, ST 1, OBC-2, EWS-1, UR-4)

சம்பளவிகிதம்: ரூ.35,400 - 1,12,400

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Mechanical/ Electrical/Marine Engineering/Production Engineering போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவுகளில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பழுது பார்க்கும் பணியில் குறைந்தது 2வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை :

டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் General Knowledge, Arithmetic, General English, Mental Ability போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

www. indiancoastguard.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் படிக்கவும், விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்யவும் இந்த லிங்கை கிளிக் செய்யவும்: https://indiancoastguard.gov.in

அதை தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றுகள் (Self Attest) செய்த நகல்களையும் இணைத்து 20.9.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!