இந்திய கடற்படையில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய கடற்படையில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X
இந்திய கடற்படையில் 50 எஸ்எஸ்சி அதிகாரி (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கடற்படையில் (Indian Navy) எஸ்எஸ்சி (தகவல் தொழில்நுட்பம்) 50 அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பதவி: SSC officer(Information Technology)

பணியிடங்கள்: 50 Posts.

சம்பளம்: Rs.56100 – Rs.1,10,700 per month.

கல்வித்தகுதி:

கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஸ்ட்ரீமின் கீழ் BE/B.Tech பட்டப்படிப்பை முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த இந்திய கடற்படை SSC அதிகாரி காலியிடத்திற்கு 2022 விண்ணப்பிக்கலாம்.

(அல்லது)

MCA/MSc(IT/CSE) முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது: 02.07.1997 - 01.01.2003 தேதிகளுக்கு இடையில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள் வரும் 27.01.2022ம் தேதி முதல் 10.02.2022ம் தேதிக்குள் https://www.joinindiannavy.gov.in/en/account/account/state என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_17_2122b.pdf என்ற முகவரியை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!