வேலை வழிகாட்டி: நபார்டு வங்கியில் Assistant Manager பணியிடங்கள்

வேலை வழிகாட்டி: நபார்டு வங்கியில் Assistant Manager பணியிடங்கள்
X
விவசாயம், கிராம முன்னேற்றத்திற்காக இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் நபார்டு வங்கியில் Assistant Manager பணிகள்

விவசாயம் மற்றும் கிராம முன்னேற்றத்திற்காக இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் NABARD BANK தேசிய வங்கியில் Assistant Manager பணிகள். Recruitment to the post of Assistant Manager in Grade 'A' (RDBS) – காலியிடங்கள் 153 பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம். (Advt. No.2/Grade A/2021-22)

இது குறித்த விபரம் வருமாறு:

பணியின் பெயர், காலியிட விபரங்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.


வயதுவரம்பு: 1.7.2021 தேதியின் அடிப்படையில் வயது 21-லிருந்து 30 க்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.1991-லிருந்து 1.7.2000-க்கு இடைப்பட்ட ஆண்டில் பிறந்திருக்க இருக்கவேண்டும்.

SC/ST/EX-SM பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் வயதுவரம்பில் சலுகை உண்டு.

சம்பளவிகிதம்: ரூ.28,150 - 55,600

கல்வித்தகுதி: அட்டவணை யில் கொடுக்கப்பட்டுள்ள பணிக்கேற்ற துறை சார்ந்த பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் Preliminary Exam, Main Exam மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Preliminary தேர்வு ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடங்கள் :

தமிழ்நாட்டில் சென்னை, முறை மதுரை, கோவை, சேலம் திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர் போன்ற இடங்களில் முதற்கட்ட தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.800. SC/ST/PWD பிரிவி னருக்கு ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை

www.nabard.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும்போது தற்போதைய கலர் புகைப்படம், கையொப்பம், இடது பெருவிரல் கைரேகை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும். மேலும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 7.8.2021.

மேலும் கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ளவும், தேர்விற்கான பாடத்திட்டம், தேர்வு பற்றிய விபரம், நடைபெறும் இடம் போன்ற விபரங்களை அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையில் காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: https://www.nabard.org

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்