டிகிரி முடித்த 6100 பேருக்கு State Bank of India வில் அப்ரண்டிஸ் பயிற்சி

டிகிரி முடித்த 6100 பேருக்கு State Bank of India வில் அப்ரண்டிஸ் பயிற்சி
X
பொதுத்துறை வங்கியான State Bank of India பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.15000/- உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சியை வழங்குகிறது

பொதுத்துறை வங்கியான State Bank of India பட்டதாரிகளுக்கு ரூ.15000/- உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சியை வழங்குகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்த விபரங்கள் வருமாறு:

பயிற்சியின் பெயர்: Apprenticeship Training

காலியிடங்கள்: 6100

( மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள காலியிட விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது )

உதவித்தொகை: ரூ.15000/- மாதம்.

வயதுவரம்பு 31 -10 -2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PWD பிரிவை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

ஆன்-லைன் வழி எழுத்துத்தேர்வு மற்றும் உள்ளூர் மொழியில் பேசும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்:

சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், நாகர்கோவில்.

எழுத்துத் தேர்வுக்குரிய பாடத்திட்டம் மதிப்பெண், தேர்வு நேரம் போன்ற விவரங்கள் :

The structure of online written examination ( online objective type ) would be as follows

S.NO

Name of Test

No.of Questions

maximum Marks

Duration

1

General / Financial Awareness

25

25

15

2

General English

25

25

15

3

Quantitative Aptitude

25

25

15

4

Reasoning Ability & Computer Aptitude

25

25

15


Total

100

100

1 hour

விண்ணப்பக் கட்டணம்:

ரூபாய் 300/- கட்டணத்தைSBI வங்கி E-receipt ஐ பயன்படுத்தி ஆன்லைன் மூலம் செலுத்தவும், SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள். ஆன்லைன் முறையில் 26 -7 -2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம், மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!