ITI படித்தவர்களுக்கு ரயில்வேயில் உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி: காலியிடங்கள் 2422
கோப்புப்படம்
மத்திய இரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தொழிற்சாலைகளில் IT படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கபடுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பெறுபவர்களுக்கு ரயில்வே விதி முறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்ற வர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
இது குறித்த விபரங்கள்
பயிற்சியின் பெயர்: Trade Apprentice
மொத்த காலியிடங்கள்: 2422
வயதுவரம்பு: 15 முதல் 24-க்குள்ளிருக்க வேண்டும். கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற் பிரிவில் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கப்படும் டிரே டுகள் விபரம் வருமாறு: Mechanic (Diesel), Fitter, Electrician, Carpenter, Motor Mechanic, Welder (Gas & Electric), Painter, Machinist, Turner, Wireman, Air Conditioning, Lineman, Winder (Armature) MMTM (Machine & Tool), Tailor, PSAA, Painter (General), Lab Assistant, COBA.
தேர்வு செய்யப்படும் முறை:
10-ஆம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் பெற்றுள்ள மதிப் பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100. ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
SC/ST/PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் www. rrccr.com தளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப் பூர்வ அறிவிப்பைக் காண: Notification
விண்ணப்பிக்கும் முறையைக் காண : INSTRUCTIONS FOR THE CANDIDATES
விண்ணப்பம் செய்ய: Online Application
கூடுதல் விபரங்களுக்கு, மேற்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16.2.2022
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu