நீலகிரியில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் அழைப்பு

நீலகிரியில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்: ஆட்சியர் அழைப்பு
X

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், நீலகிரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், கடந்த 8-ந் தேதி நடைபெற இருந்த, மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது, கலெக்டர் அனுமதியுடன் வரும் 25,ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடக்கிறது. முன்னணி அரசு பொதுப்பணித்துறை மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் நேரடி தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை மேற்கொள்கின்றனர்.

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்று, தொழிற்பழகுனர் பயிற்சி பெறாதவர்கள் நேரடியாக அசல் சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு, மாதம் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

பயிற்சி பெற்றவர்கள், மத்திய, மாநில தொழில் சார்ந்த அரசு மற்றும் அரசு பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!