இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (IOCL) 626 காலிப் பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (IOCL) பல்வேறு பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், வர்த்தக பயிற்சியாளர் மற்றும் டெக்னீஷியன் உள்ளிட்ட மொத்தம் 626 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவர்கள் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி:
வர்த்தக பயிற்சியாளர்: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் NCVT / SCVT ஆல் அங்கீகரிக்கப்பட்ட முழுநேர ஐடிஐ படிப்பு.
டெக்னீஷியன் அப்ரண்டிஸ்: பொறியியல் துறைகளில் மூன்று வருட முழுநேர டிப்ளமோ.
வர்த்தக பயிற்சியாளர் (கணக்காளர்): வணிகவியல் பிரிவில் முழுநேர இளங்கலைப் பட்டப்படிப்பு.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (புதிய பயிற்சியாளர்கள்): 12வது தேர்ச்சி.
உள்நாட்டு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (திறன் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்): 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓராண்டுக்கு குறைவான பயிற்சிக்கான 'உள்நாட்டு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' என்ற திறன் சான்றிதழ்.
வயது: 31.12.2022ன் படி 18 வயது முதல் 24 வயது வரை.
இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் https://iocl.com/apprenticeships என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணங்கள் ஏதுமில்லை.
மேலும் விபரங்களுக்கு https://iocl.com/admin/img/Apprenticeships/Files/6bd3584808324876895254bc71f2d466.pdf என்ற லிங்கை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu