தென்காசி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்நோக்கு உதவியாளர் 40 பணியிடங்கள்

தென்காசி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்நோக்கு உதவியாளர் 40 பணியிடங்கள்
X
சுகாதாரத்துறையில் பல்நோக்கு உதவியாளர் 40 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 40 பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தற்காலிகமாக நியமனம் செய்யப்படுவதாகும்.

இந்த பணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும் 15.12.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அருகில் உள்ள துணை சுகாதார நிலையம் அல்லது நல்வாழ்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

பன்னிரெண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுகாதார ஆய்வாளர் அல்லது துப்பரவு ஆய்வாளர் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் கிராமிய நிறுவனம் உள்ளிட்ட நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் உடனடியாக இன்றைய தேதியில் இருந்து வருகிற 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

காலியாக உள்ள இடங்கள்:

மாறாந்தை, மருதம்புத்தூர், நெட்டூர், ஊத்துமலையில் 3 காலியிடம், வீராணம், கடையம், கோவிலூத்து, சொக்கம்பட்டி, சுந்தரேசபுரம், அரியப்பபுரம், கரும்பனூர், கலிங்கப்பட்டி, குருவி குளத்தில் இரண்டு இடம், திருவேங்கடம், குருக்கள்பட்டி 5 இடம், சேர்ந்த மரத்தில் 5 இடம், கரிவலம்வந்தநல்லூர், மடத்துப்பட்டி மூன்று இடம், ரெட்டியார்பட்டி, இலத்தூர், புளியரை, பெரிய பிள்ளை வலசை, சுந்தரபாண்டியபுரம், வடகரை, தலைவன்கோட்டை, தென்மலை, வாசுதேவநல்லூர் என 40 இடங்கள் காலியாக உள்ளது.

Tags

Next Story