UPSC - ல் 363 காலியிடங்கள்: முதுநிலை பட்டதாரிகள் Principal பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்

UPSC - ல் 363 காலியிடங்கள்: முதுநிலை பட்டதாரிகள் Principal பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்
X
ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து, குறைந்தது 10 வருடங்கள் ஆசிரியராக பணி புரிந்திருக்க வேண்டும்.

டெல்லி அரசின் கல்வித் துறையில் காலியாக உள்ள Principal பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதன் விபரங்கள் :

மொத்த காலியிடங்கள்: 363

தகுதி:

ஏதாவதொரு பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து, குறைந்தது 10 வருடங்கள் ஆசிரியராக பணி புரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை :

தகுதியானவர்கள் UPSC ஆல் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, விண்ணப்பதாரரின் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் www. upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 29.7.2021 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!