எல்லை பாதுகாப்பு படையில் 2788 கான்ஸ்டபிள் பணிகள்

எல்லை பாதுகாப்பு படையில் 2788 கான்ஸ்டபிள் பணிகள்
X
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டிருக்கும் டிரேடுகள் ஏதாவதொன்றில் 1 வருட ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்

உள்துறை அமைச்சகத் தின் கீழ் செயல்படும் துணை ராணுவ படைகளில் ஒன்றான, எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force) காலியாக உள்ள 2788 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

இது குறித்த விபரங்களவான :

பணியின் பெயர்: Constable (Tradesmen)

மொத்த காலியிடங்கள்: 2788

(ஆண்கள் -2651, பெண்கள் - 137)

டிரேடு வாரியாக காலியிட பகிர்வு விபரம் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது


வயது: 1.8.2021 தேதியின் படி 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC பிரி வினர்களுக்கு மத்திய அரசு விதி முறைப்படி வயது வரம்பு சலுகை தரப்படும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டிருக்கும் டிரேடுகள் ஏதாவதொன்றில் 1 வருட ITI படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட டிரேடில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: (ஆண்கள்) 1.உயரம் - 167.5 செ.மீ. இருக்க வேண்டும். ST பிரிவினர்கள் 162.5 செ.மீ. இருக்க வேண்டும்.

2. மார்பளவு 78 முதல் 83 செ.மீ. இருக்க வேண்டும். ST பிரிவினர்கள் 76 முதல் 81 செ.மீ. இருக்க வேண்டும்.

உடற்தகுதி: (பெண்கள்)

உயரம் -157 செ.மீ. இருக்க வேண்டும். ST பிரிவினர்கள் 150 செ.மீ. இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி:

1.ஆண்கள் 5 கிலோ மீட் டர் தூரத்தை 24 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும். 2.பெண்கள் 1.6 கிலோமீட்டர் தூரத்தை 8.30 நிமிடத்தில் ஓடி முடிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: BSF-ல் நடத்தப்படும் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ தகுதி மற்றும் தொழிற் திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம்,மதிப்பெண் விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பக் கட்டணம்

ரூ.100. கட்டணத்தை NET Banking மூலம் ஆன்லைன் முறையில் செலுத்தவும். பெண் கள், SC/ST பிரிவினர்கள், முன் னாள் ராணுவத்தினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை www.rectt.bsf.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் 1.3.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முழு விபரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்து படிக்கவும் : Notification

Tags

Next Story
why is ai important to the future