+2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் தொழில் நுட்பபிரிவில் வேலை

+2  படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் தொழில் நுட்பபிரிவில் வேலை
X

கோப்பு படம்

BE/ B.Tech/ படிப்பிற்கான JEE MAIN EXAM-2021 எழுதியவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும், கடைசி நாள்: 8.11.2021

+2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் தொழில் நுட்பபிரிவில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. 5 வருட பயிற்சி முடித்தபின் ராணுவத்தில் Lieutenant-ஆக பணியில் அமர்த்தப்படுவர். ஆர்வமும் தகுதியும் உள்ள திருமணமாகாத ஆண்கள் மட்டும் இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.


இதுகுறித்த விபரங்கள் வருமாறு :

பயிற்சியின் பெயர்: 10 +2 Technical Entry Scheme (COURSE-46)

காலியிடங்கள்: 90

வயதுவரம்பு: 16 1/2 முதல் 19 1/2 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அதாவது 2.7.2002- அன்று முதல் 1.7.2005 வரை உள்ள இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Physics, Chemistry & Mathematics-ஐ ஒரு பாடமாகக் கொண்டு 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். BE/ B.Tech/ படிப்பிற்கான JEE MAIN EXAM-2021 எழுதி இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.56,100 - 1,77,500

உடற்திறன் தகுதி

15 நிமிடத்திற்குள் 2.4 கி.மீ தூரம் ஓடிக் கடக்க வேண்டும்.

Skipping ஆடத் தெரிந்திருக்க வேண்டும்.

Pushups – 20, Sit ups – 20, Chin ups -8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

செங்குத்தான கயிற்றில் 3.4 மீ. தூரம் ஏறிக் கடக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் +2 மற் றும் JEE Main Exam-ல் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் SSB நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். SSB நேர்முகத்தேர்வானது Stage-I & Stage-II என இரு கட்டங்களாக நடைபெறும்.

Stage-I தேர்வில் உளவியல் மற்றும் குழுவிவாதம் நடை பெறும். இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு Stage-II-வில் உடற் தகுதித்தேர்வு, மருத்துவத் தேர்வு நடைபெறும்.

நேர்முகத்தேர்வு நடை பெறும் இடங்கள்: Allahabad (UP), Bhopal (MP), Bengaluru (Karmataka)/Kapurthala (Punjab).

SSB நேர்முகத்தேர்விற்கான Call Up Letter-ஐ இணைய தளத்தில் இருந்து டவுண் லோடு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 5 வருட பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவப் பயிற்சி ஒரு வருடமும், ராணுவ தொழிற் நுட்ப பயிற்சி 4 வருடமும் வழங்கப்படும்.

பயிற்சி ஆரம்பமாகும் தேதி: ஜனவரி-2022 5 வருட பயிற்சி முடித்தபின் ராணுவத்தில் Lieutenant-ஆக பணியில் அமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www. joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட்அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.

SSB நேர்முகத்தேர்வின் போது கல்வித்தகுதி சான்றிதழ், வயதுசான்று, JEE Main- தேர்வு மதிப்பெண் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 8.11.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து

முழுவதும் கவனமாக படிக்கவும் : https://joinindianarmy.nic.in

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!