தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ரூ.45,000 சம்பளத்தில் 152 பணியிடங்கள்

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ரூ.45,000 சம்பளத்தில் 152 பணியிடங்கள்
X
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் ரூ.45,000 சம்பளத்தில் 152 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி, அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாகமாக செயல்படுத்துவதற்கு நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை என்ற திட்டங்களை தமிழக அரசு அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்கள் அனைத்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவைப் பெறுவதில் தொடங்கி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களைப் பெற வேண்டும் என்ற உயரிய இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆர்வமும், திறமையும் உள்ள இளைஞர்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


• தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்.

• விண்ணப்பம் செய்யும் காலம் ஏப்ரல் 22, முதல் ஜூன் 15,2022 வரை

• பணிக்காலம் ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை

• தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணிக்காலத்தில் தாங்கள் பணிபுரியும், மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.

• பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும்.

Important Links:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here


Tags

Next Story