இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி-பிரபல தனியார் வாகன நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி-பிரபல தனியார் வாகன நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
X
பிரபல TVS Motor நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் வாகன நிறுவனமான TVS Motor நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprentice & Trainee ஆகிய பணிகளுக்கு என திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே திறமை படைத்த பட்டதாரிகள் தவறாது இந்த பணிகளுக்கு தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்து கொள்ள இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி பிரிவு சார்பில் அறிவுறுத்தப்படுகிறார்கள்.அதற்கான தகவல்களை கீழே பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

பணியின் பெயர் Apprentice & Trainee

பணியிடங்கள் Various

கடைசி தேதி June 22-26

விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Apprentice & Trainee ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டபட்டுள்ளது.

10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Mechanical, Automobile, Production, EEE & ECE பாடப்பிரிவுகளில் ITI அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.13,730/- முதல் அதிகபட்சம் ரூ.14,750/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாகவே தான் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் ஆனது வரும் ஜூன் 22 முதல் 26 வரை நடைபெற உள்ளது.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கான நேர்காணலில் தவறாது கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள்.

TVS Motor Recruitment 2021




Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்