இந்திய கடலோர காவல் படையில் காலிபணியிடங்கள்

இந்திய கடலோர காவல் படையில் காலிபணியிடங்கள்
X
இந்திய கடலோர காவல் படையில் Navik & Yantrik 01/2022 BATCH ஆகிய பணிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து Navik & Yantrik 01/2022 BATCH ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி சார்பில் கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

நிறுவனம் Indian Coast Guard

பணியின் பெயர் Navik & Yantrik 01/2022 BATCH

பணியிடங்கள் 350

கடைசி தேதி 02.07.2021-16.07.2021

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

இந்திய கடலோர காவல் படையில் Navik & Yantrik 01/2022 BATCH ஆகிய பணிகளுக்கு என 350 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Navik – 310 பணியிடங்கள்

Yantrik – 40 பணியிடங்கள்

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு உட்பட்ட பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Navik (General Duty) – பள்ளி கல்விக்கான வாரியங்களின் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் Maths and Physics பாடங்களில் நல்ல மதிப்பெண்ணுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Navik (Domestic Branch) – பள்ளி கல்விக்கான வாரியங்களின் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Yantrik – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical/ Mechanical / Electronics/ Telecommunication (Radio/Power) Engineering பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Written Examination, Physical Fitness Test, Document Verification, Medicals Examination உடன்பட நான்கு கட்ட சோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் தேர்வு கட்டணமாக ரூ.300/- செலுத்த வேண்டும். தேர்வு அட்மிட் கார்டு கட்டணம் செலுத்தியவர்களுக்கு முறையாக வழங்கப்படும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 02.07.2021 அன்று முதல் 16.07.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

https://joinindiancoastguard.cdac.in/

https://joinindiancoastguard.cdac.in/assets/img/news/ICG_FULL PAGE_EP 01 OF 2022 BATCH.pdf

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!