திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மொழித்தேர்வுக்கு 199 பேர் ஆப்சென்ட்
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வினை ஆய்வுசெய்த கலெக்டர் கிறிஸ்துராஜ்.
Plus Two Exam Absent
திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 92 தேர்வு மையங்களில் 24 ஆயிரத்து, 242 மாணவ, மாணவியர் தேர்வெழுத உள்ளனர். முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், வழித்தட அலுவலர், பறக்கும் படையினர் உட்பட, ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.
நே்று காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கியது. வினாத்தாள் படிக்க, விடைத்தாள் முகப்பு பக்கத்தை நிரப்ப, 15 நிமிடம் வழங்கப்பட்டது. காலை 10:15க்கு துவங்க்கிய தேர்வு மதியம் 1:15 வரை நடந்தது.பொதுத்தேர்வில் முறைகேடுகளை செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிக்க, கலெக்டர் கிறிஸ்துராஜ், முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம் தலைமையில், ஆசிரியர்களை கொண்ட, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்துக்கான பொதுத்தேர்வு சிறப்பு அதிகாரி ஆனந்தி தேர்வு பணிகளை மேற்பார்வை செய்தார்
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் கலெக்டர் கிருஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நேற்று நடைபெற்ற மொழிப்பாடத்தேர்வுக்கு 199 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியிருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu