அஜித் 10,000 கி.மீ பயணம்
இன்னிவரைக்கும் அப்டேட் கேட்டே ட்ரெண்டிங் ஆகும் படமான வலிமை நாயகன் அஜித் சில வாரங்களுக்கு முன்னாடி லாங் பைக் ட்ரைவ்-வை தொடங்கினார் . தனக்கு மிக நெருங்கிய நண்பர்களுடன் இந்த பயணத்தைத் திட்டமிட்டு இருந்தார். எந்த வழியாக எங்குச் சென்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டது.
இடையே, சாலையோர உணவகம் வைத்திருப்பவரின் மகன் படிப்புச் செலவை அஜித் ஏற்றிருப்பதாகச் செய்தி மட்டுமே வெளியானது. தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு, ஹைதராபாத் திரும்பியுள்ளார் அஜித். தன்னுடன் பயணித்த அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்துள்ளார் என்றெல்லாம் செய்திகள் வந்தது..
இதில் அஜித்துடன் ட்ராவல் செஞ்ச தினேஷ் குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்டுக் கூறியிருப்பது: "அஜித் அவர்கள், நம்ம தல, சென்னை - கோவை -சென்னை - ஹைதராபாத் - வாரனாசி - காங்டாக் - லக்னோ - அயோத்யா - ஹைதராபாத் - சென்னை என 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர் அஜித் அவர்கள்தான். சுத்தமான தங்கம்" என்று பதிவு செய்துள்ளார்.
-மைக்கேல்ராஜ்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu