நானும் சிங்கிள் தான்

நானும் சிங்கிள் தான்
X
நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக் காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். -இயக்குனர் கோபி

திரி இஸ் ஏ கம்பெனி என்கிற பட நிறுவனத்தோடு ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்த படம் 'நானும் சிங்கிள் தான்'. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோபி என்பவர் இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ் சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்றார் இயக்குனர் கோபி.

-மைக்கேல்ராஜ்

Tags

Next Story