ஹேப்பி பர்த் டே பிரமானந்தம்
நகைச்சுவை செய்வதென்பது தனிக்கலை. அதில் வெற்றிபெற்றவர்களில் மிக முக்கியமான இருவர்களில் ஒருவர் வடிவேலு. இன்னொருவர் பிரம்மானந்தம். டோலிவுட்டில் கேமரா இல்லாமக்கூட படம் எடுப்பாங்க, ஆனா பிரம்மானந்தம் இல்லாம படம் எடுக்கமாட்டாங்க என்பது இவரைப் பற்றிய பிரபலமான சொல்வழக்கு.
பிரம்மானந்தத்தை மனதில் வைத்துத்தான் பெரும்பாலான தெலுங்குப் படங்களின் திரைக்கதையே எழுதப்படுகின்றன. 'கிங் ஆஃப் செகண்ட் ஹாப்' என்ற அடைமொழிக்கேற்ப, படத்தின் இரண்டாம் பகுதியை தொய்வு ஏற்படாமல் தனது காமெடி ட்ராக்குகளால் பலம் சேர்ப்பதில் இவர் திறமை வாய்ந்தவர்.
இந்த செகண்ட் ட்ராக் பில்ட் அப் குறிச்சு விசாரிச்சப் போது தெலுங்குத் திரையுலகில் பிரபலமான பழைய கதையை சொன்னாய்ங்க. அதாவது டோலிவுட்.புரொட்யூசரிடம் கதை சொல்லி ஓகே வாங்க வரும் இளம் இயக்குநர், 'சார்... முதல் சீன்லயே ஹீரோவ பல பேர் துரத்துறாங்க. ஒவ்வொருத்தரையா அடிச்சு துவம்சம் பண்றார் ஹீரோ. இதுவரைக்கும் ஹீரோவோட கை கால்கள மட்டும்தான் காமிக்கிறோம். தன்ன சுத்தி இருக்குற பலரையும் அடிச்சு பறக்கவிடும்போது கரெக்ட்டா ஹீரோ முகத்தைக் காட்றோம்' என கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
முதல் பாதி வரை கதைகேட்ட தயாரிப்பாளருக்கு கதை பிடிச்சுடுது. 'சரிப்பா பர்ஸ்ட் ஹாப் சூப்பர். செகன்ட் ஹாப் என்ன பண்ணப்போற?' என இளம் இயக்குநரிடம் தயாரிப்பாளர் கேட்கிறார். இதற்கு, 'சிம்பிள் சார். செகன்ட் ஹாப்ல பிரம்மானந்தம் சார் வர்றார். மிச்சத்த அவர் பார்த்துப்பார்' எனப் பதில் சொல்லி கதைக்கு வெற்றிகரமாக 'ஓகே' வாங்குகிறார் இயக்குநர்.
அந்த அளவுக்கு தெலுங்குத் திரையுலகத்தில் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் கொடி இன்னி வரைக்கும் உயரப் பறக்கிறது.
தெலுங்கில் எம்.ஏ. பட்டம் முடித்துவிட்டு, விரிவுரையாளராக பாடம் சொல்லித்தந்து கொண்டிருந்த பிரம்மானந்தம் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் உடன் நடித்து, அவரது மகன் பாலகிருஷ்ணா, தற்போது ஜூனியர் என்.டி.ஆர் வரை அனைவருடனும் நடித்தாலும், தலைமுறை தாண்டியும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பிரம்மானந்தம். மேலும் நடிகர் பிரம்மானந்தம் பென்சிலால் ஓவியம் வரைவதில் திறமையானவர் என்று அவர் வரைந்த ஓவியங்கள் சமூக வலைத்தளத்தில் அண்மையில் வைரலாகி பலரையும் அசர வைத்தது. குறிப்பாக அவர் வரைந்த வெங்கடாஜலபதி ஓவியம் அச்சுஅசலாக வெங்கடாஜலபதியை நேரில் பார்த்த மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறினாங்க. அதேபோல் அவர் வரைந்த அனுமார் ஓவியம் ஒன்றும் உள்ளத்தைக் கவரும் வகையில் இருந்துச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்ததில் அதிக அளவில் படம் நடித்தற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள பிரமானந்தம் 64வது பர்த் டே -யை ஒட்டி அவருக்கு வாழ்த்து சொல்வதில் ரசிகர்களும், நம்ம சினிமா அப்டேட் குழுவினரும் மகிழ்ச்சி கொள்கிறது.
-மைக்கேல்ராஜ்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu