காமெடி ஆக்டர் வடிவேலு : முதல் அறிமுகம்
பலமுறை நடிகர் ராஜ்கிரணே வடிவேலுவை அறிமுகப்படுத்தியது நான் தான் என்று கூறி உள்ளார். பிறகு வடிவேலும் ராஜ்கிரன் தான் அறிமுகப் படுத்தியாக பல்வேறு பேட்டிகளில் கூறி இருக்கிறார். - ஆனா வடிவேலு மொத மொதலா நடிச்ச படத்தின் புகைப்படத்தை மேலே பாருங்க!
ஆம்.. வடிவேலு முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தில் தான் நடிச்சிருக்கார். இந்த படத்தின் புகைப்படம்தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதற்குப் பிறகுதான் நடிகர் வடிவேலு 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே படத்தில் நடிச்சார். அந்த படத்தின் மூலம் தான் வடிவேலு அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். இந்த படத்தில் தான் வடிவேலுவின் பெயர் டைட்டில் கார்ட்டில் வந்தது. எனவே, இந்த படம் தான் வடிவேலுவின் முறையான முதல் சினிமா அறிமுகம் என்றும் கருதப்படுது.
இத்தனைக்கும் அந்த படத்தில் வடிவேலுவுக்கு ஆரம்பத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை தான் முதலில் கொடுத்திருந்தார் ராஜ் கிரண். -விளம்பரம்- ஆனால், இவரது திறமை பிடித்துப்போக இவருடைய நடிப்பு திறனை பார்த்து இவரையே ஒரு பாடலையும் பாட வைத்து இருப்பார் ராஜ்கிரண். போடா போடா புண்ணாக்கு என்ற பாடல் மூலம் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும் பாடகராகவும் புகழ் பெற்றார் வடிவேலு. இந்தப் படத்தில் தான் வடிவேலு அறிமுகம் என்று டைட்டில் போடப்பட்டிருந்தது.
- மைக்கேல்ராஜ்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu